இந்தியத் திரை உலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராகவும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகராகவும் திகழும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக பாலிவுட்டில் தீபிகா படுகோனே மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஹிந்தி தெலுங்கு மொழிகளில் உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்தில் தற்போது நடித்து வருகிறார்

மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இதிகாச கதைக்களமான இராமாயணத்தைத் தழுவி தயாராகும் ஆதிப்ருஷ் படத்திலும் நடித்துள்ள பிரபாஸ், கன்னட சினிமாவில் வெளிவந்து இந்திய அளவில் மெகா ஹிட்டான கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் சலார் படத்தில் நடித்து வருகிறார்

இதனிடையே வருகிற மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமான ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் புதிய பாடல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அசத்தலான அந்த பாடல் ப்ரோமோ வீடியோ இதோ…