தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.

கொரோனவை அடுத்து சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா என்றாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அஞ்சனா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் இவரது காரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெரிய கீறல் ஒன்றை போட்டுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சனா இப்படி பண்றதுல என்ன சந்தோஷம் கிடைக்குதோ அந்த சைக்கோகளுக்கு என்று திட்டி தீர்த்துள்ளார்.

tamil vj anjana rangan furious over people responsible for damaging her car