தமிழ்சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

அடுத்ததாக நடிகர் விஷால் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் & மாசிலாமணி படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர்களுடன் இணைந்து எரியும் கண்ணாடி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் நடிகை சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரெஜினா திரைப்படம் அடுத்து ரிலீஸாக தயாராகி வருகிறது. இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரெஜினா திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

YELLOW BEAR புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ரெஜினா படத்திற்கு பவி.கே.பவன் ஒளிப்பதிவில் டோபி ஜான் படத்தொகுப்பு செய்ய சதீஷ் நாயர் இசையமைக்கிறார். இந்நிலையில் சுனைனாவின் ரெஜினா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் ரெஜினா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…