லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன்தாரா, பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து நடித்துள்ள கோல்ட் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இன் திருமண நிகழ்ச்சி அழகிய தொகுப்பாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. விறுவிறுப்பான O2 பட ட்ரைலர் இதோ…