தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய நிகழ்வான 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நிகழ்வை மையப்படுத்தி வெளியான 83 திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்து மேதாவி & வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகி வருகின்றன. இதனிடையே கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் இருவரும் இணைந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

இந்த வரிசையில் இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள திரைப்படம் கோல்மால்.ஜாகுவார் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் கோல்மால் படத்தில் தான்யா போப், பாயல் ராஜ்புத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, யோகிபாபு, யூகி சேது, மாளவிகா, ஆர்த்தி, சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க மொரீசியசில் நடைபெற்ற கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்நிலையில் கலகலப்பான பாக்கா என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் கோல்மால் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…