பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியதுடன், இந்தியாவிற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா என்ற பெண், சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்று பேசினார். 

அப்போது பேசிய அவர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை கடுமையாக விமரச்னம் செய்திருந்திருந்தார்.

இதனைக் கண்டித்து கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே மத மோதல் வெடித்தது. இதனால், அமைதிக்கு பெயர் போன இந்தியா, கலவர பூமியாக மாறிப்போனது.

இவற்றுடன், பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாகவும், இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து கிளம்பியது.

இதனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு இந்தியா முழுவதும் மிக கடும் கண்டனங்கள் எழுந்தது. 

மிக மிக்கயமாக, இந்தியாவில் நடந்த கலவரம் பற்றியும், இதற்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா பேசிய கருத்துக்களும், இந்தியாவையும் தாண்டி உலகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவியது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்தியாவை கடும் கடும் கண்டனங்கள் தெரிவித்தன. 

அதே நேரத்தில், பாஜக பிரமுகர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு, இந்தியாவில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை மிக கடுமையாகவே பதிவு செய்தனர்.

இப்படியாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, பாஜகவிற்கு உலக அரங்கில் பெரும் நெருக்கடியான ஒரு நிலை ஏற்பட்டது.

இதனால், வேறு வழியின்றி, நுபுர் சர்மா அக்கட்சியிலிருந்து அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார். இவற்றுடன், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் உடனடியாக நடவடிக்கையும் எடுத்தது.  

அதன் தொடர்ச்சியாகவே, “பாஜக, அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி என்றும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது” என்றும், பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

எனினும், இந்த செயலுக்கு உலகில் உள்ள முக்கிய இஸ்லாமிய நாடுகளான கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகளின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்தந்த நாடுகளின் சார்பிகல் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில், பாஜக நிர்வாகிகள் தெரிவித்த இந்த அவதூரான கருத்துக்கு “இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, குவைத் அரசு வலியுறுத்தி இருக்கிறது. 

குறிப்பாக, “வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்றும், குவைத் அரசு வலியுறுத்தியுள்ளது.

“நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவது மத சுதந்திரத்தை மீறும் செயல்” என்று, ரஷ்ய அதிபர் புதினும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமிய மத உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது” என்று, கூறி ஆப்கன் தாலிபான் அரசு கடுமையான கண்டத்தை தெரிவித்து உள்ளது.

மிக முக்கியமாக, “இஸ்லாமிய வெறுப்பு காரணமாக இந்தியாவை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், அந்நாட்டிற்கு சென்றுள்ள இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கத்தாரில் மேற்கொள்ள இருந்த முக்கியமான மீட்டிங் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

அதே போல், அந்நாட்டு துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் நடக்க இருந்த மதிய உணவு விருந்தும், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. வெங்கையா நாயுடு கத்தாரில் இருக்கும் போது, இந்தியாவில் இந்த இந்த மத ரீதியான மோதல் வெடித்தது, உலக அளவில் பெரும் சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.