முன்னாடியெல்லாம் டைரக்டர் ஆகணும்னா ஒரு நல்ல சினிமா ஸ்கூல்ல படிச்சுருக்கணும்,பல படங்கள்ல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கனும்ன்னு ஏகப்பட்ட Qualification இருக்கும்.டெக்னாலஜி வளர வளர அப்படியே பலபேரோட திறமைகளும் வளர்ந்தது.

இன்டர்நெட் மூலமா சினிமாவுல சாதிக்கணும்னு கனவு வெச்சுருக்க பலரும் பல விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சாங்க.பல சினிமாக்கள் பார்த்து,இன்டர்நெட் உதவியோடு அப்படி கத்துக்கிட்டு பல பேரும் Shortfilm எடுத்து அது மூலமா சினிமா சான்ஸ் வாங்க ஆரம்பிச்சாங்க.

அப்படி Shortfilm-கள் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெறவே சில குறும்படங்கள் பெரிய திரையில் கொண்டுவரலாம்னு அந்த இயக்குனர்கள் முடிவு செஞ்சாங்க.அப்படி குறும்படங்கள் , படங்களாக மாறி வெள்ளித்திரைல வெற்றிநடை போட்டுருக்கு.

நேத்து ரிலீசாகி சமூகவலைத்தளங்கள்ல சக்கைபோட்டுட்டு இருக்குற லவ் டுடே படமும் குறும்படமாக இருந்து இப்போ பெரிய திரையில ரிலீஸ் ஆகப்போகுது.குறும்படங்களை வெற்றி படங்களாக மாற்றியது யாரு யார் என்னென்ன படங்கள் அப்படிங்கிறத இப்போ பார்க்கலாம் வாங்க

பீட்சா - பீட்சா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல முதல்ல குறும்படமாக வந்தா இந்த Horror திரில்லர் , அடுத்து மக்கள்செல்வன் விஜய்சேதுபதி நடிப்புல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல 2012-ல திரைப்படமா ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடிச்சது.இந்த படத்தின் மூலமாக கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுல இயக்குனரா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

பண்ணையாரும் பத்மினியும் - பண்ணையாரும் பத்மினியும்

காருக்கும்,அதன் முதலாளிக்கும்,டிரைவருக்கும் இருக்குற Relationship ரொம்ப அழகா சொன்னது இந்த குறும்படம்.அருண் குமார் இயக்கத்துல இந்த குறும்படம் வெளியாகி ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பை வாங்கியிருந்துச்சு.இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவுல இயக்குனரா என்ட்ரி கொடுத்தாரு அருண் விஜய்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிச்ச இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்துச்சு.

காதலில் சொதப்புவது எப்படி - காதலில் சொதப்புவது எப்படி

இளைஞர்களோட காதல் அதுல வர்ற சின்ன சின்ன சண்டைகள் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த குறும்படம் நல்ல வரவேற்பை வாங்குச்சு.இதனை அடுத்து இந்த குறும்படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் படமாக எடுத்து ரிலீஸ் பண்ணாரு.இந்த படம் செம ஜாலியான ஒரு படமாக ரசிகர்கள் கிட்ட சூப்பர்ஹிட் அடிச்சது குறிப்பிடத்தக்கது.

முண்டாசுப்பட்டி - முண்டாசுப்பட்டி

கேமராவுல போட்டோ எடுத்தா இறந்துடுவோம்னு மூடநம்பிக்கையோட இருக்குற ஒரு கிராமத்துல போட்டோகிராபர் ஒருத்தர் மாட்டிக்கிற ஒரு சுவாரசியமான கதை தான் முண்டாசுப்பட்டி குறும்படம் , நகைச்சுவை கலந்த இந்த குறும்படம் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பு வாங்கியிருந்தது.இந்த ஐடியாவை இன்னும் கொஞ்சம் காதல்,ஆக்ஷன் சேர்த்து ஒரு படமாக எடுத்து ஜெயிச்சாரு இயக்குனர் ராம்குமார்

மது - மேயாத மான்

ஒரு One Side காதல் எப்படி கடைசியில ஒண்ணு சேருறாங்க அப்படிங்கிறத வித்தியாசமான கண்ணோட்டத்துல காமெடி கலந்து மது-ங்கிற குறும்படத்துல சொல்லி ஸ்கோர் பண்ணியிருப்பாரு இயக்குனர் ரத்னகுமார்.இதையே கொஞ்சம் Develop பண்ணி படமாக ரிலீஸ் பண்ணி செம ஹிட் அடிச்சுருப்பாரு ரத்னகுமார்.

கெக்க பெக்க -  நான் சிரித்தால்

திடீர்னு ஏற்படுற பிரச்சனையால ஹீரோவுக்கு சிரிக்கிற பிரச்சனை ஏற்படுது இதை மையமா வெச்சு எடுக்கப்பட்ட குறும்படம் தான் கெக்க பெக்க.குறும்படமா ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் அடிச்ச இதை , ஹிப்ஹாப் தமிழா நடிச்சு ராணா இயக்கி படமாக ரிலீஸ் ஆகி செம ஹிட் அடிச்சது இந்த படம்.

பிட்டு - டான்

படம் எடுக்கும் கனவுடன் இருக்கும் கல்லூரி மாணவனின் கதை , காலேஜுக்குள்ள அந்த படம் எடுக்கன்னு செம ஜாலியான இந்த Shortfilm பெரிய வரவேற்பை பெற்றது.இந்த படம் தான் சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிச்சு சிபி சக்கரவர்த்தி இயக்குன டான் படம்.இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை பண்ணுச்சு.

அப்(பா) லாக் - லவ் டுடே

இந்த ஜெனெரேஷன் காதலர்கள் போனை மாத்திக்கணும்னு ஒரு கண்டிஷன் போட அடுத்து என்ன நடக்குதுன்னு செம ஜாலியான குறும்படம் இதை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருப்பாரு.இதை இப்போ படமா எடுத்து நவம்பர் மாசம் ரிலீஸ் ஆகப்போகுது.இந்த ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் கிட்ட செம ஹிட் அடிச்சுட்டு இருக்கு.

நிறங்கள் மூன்று - நிறங்கள் மூன்று

கார்த்திக் நரேன் இயக்கத்துல முதல்ல குறும்படமாக வந்த இந்த நிறங்கள் மூன்று இப்போ திரைப்படமாக உருவாகிட்டு இருக்கு.இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

காதலிக்க யாருமில்லை - Highway kadhali

Highway kadhali என்ற குறும்படத்தை மையமாக வெச்சு எடுக்கப்பட்டுக்கிட்டு இருக்குற படம் தான் காதலிக்க யாருமில்லை.இந்த படத்தோட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துட்டு இருக்கு.சீக்கிரமே படம் ரிலீஸ் தேதிஅறிவிக்கப்படும்ன்னு எதிர்பார்க்கப்படுது.

இன்னும் நம்ம குறும்படங்கள் எவ்வளவோ Interesting-ஆ குறும்படங்கள் இருக்கு அதையெல்லாம் படமா எடுத்து சீக்கிரம் ரிலீஸ் பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கிறோம்.