மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. முன்னதாக இந்த ஆண்டில் (2022) மலையாளத்தில் அர்ச்சனா 31 நாட் அவுட், தெலுங்கில் கோட்சே தமிழில், கார்கி மற்றும் கேப்டன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக பிரம்மிப்பின் உச்சமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். அடுத்ததாக விஷ்ணு விஷால் உடன் கட்டா குஸ்தி மற்றும் துல்கர் சல்மானுடன் கிங் ஆஃப் கோத்தா ஆகிய படங்களில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸின் இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ள திரைப்படம் அம்மு. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழங்கும் அம்மு படத்தில் நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் அம்மு திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…