தென்னிந்திய திரை உலகில் முன்னணி இளம் கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து மாநாடு படத்திலும் கல்யாணி கதாநாயகியாக நடித்தார்.

மேலும் மலையாளத்திலும் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளிவந்த மரக்கார், ஹிரித்யம், ப்ரோ டாடி மற்றும் தள்ளுமால ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக மலையாளத்தில் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா எனும் திரைப்படத்தில் கல்யாணி தற்போது நடித்து வருகிறார்.

தளபதி விஜய் அவர்களின் மேலாளரும், மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் அவர்கள் தனது தயாரிப்பில் முதல் திரைப்படமாக தயாரிக்கும் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குனர் மனோ.C.குமார் எழுதி இயக்குகிறார். ஷேஷம் மைக்கில் பாத்திமா திரைப்படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்ய, ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார்.

தயாரிப்பாளர் ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் PASSION STUDIOS இணைந்து தயாரிக்கும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராக இருக்கும் ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஷேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர் புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

Huraayyy!!! It’s a schedule wrap for Sesham Mike-il Fathima ❤️

To all the late late night shoots, insane team effort & tons of energy to bring each scene to life - Kudos to Team #SeshamMikeilFathima for their tremendous work. pic.twitter.com/zlbECZX3Ss

— TheRoute (@TheRoute) October 5, 2022