ரசிகர்கள் விரும்பும் அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வீரமே வாகை சூடும். தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் விஷால் நடிப்பில் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் SJ.சூர்யா ஜாக்கி பாண்டியன் எனும் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர தயாராகி வருகிறது..

விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் லத்தி திரைப்படத்தின் முதல் பாடலாக "தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்" என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடல் இதோ…