தமிழ் சினிமால இருக்குற மாஸ் ஹீரோஸ் எல்லாருமே ஒரு செம Don-ஆ பயங்கர ஸ்டைலிஷா நடிக்கணும்னு ஒரு கனவு இருக்கும்.Gangster,Don அப்படினாலே பலருக்கும் டக்குன்னு நியாபகம் வர்றது மும்பை தான்.மும்பைல பல படங்கள் எடுக்கப்பட்டு சூப்பர்ஹிட் அடிச்சுருக்கு.

நம்ம சூப்பர்ஸ்டார்கள் தொடங்கி வளர்ந்து வர நடிகர்கள் வரை மும்பை Don-ஆ நடிச்சுடணும்னு ஒரு கொள்கையோட இருக்காங்க.அப்படி பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரைக்கும் நிறைய டான்கள் அவதரிச்சுருக்காங்க.நாளைக்கு இதே போல மும்பைல நடக்குற ஒரு டான் கதைல சிலம்பரசன் களமிறங்குறாரு அவருக்கு முன்னாடி யாரெல்லாம் டான்-ஆ இருந்துருக்காங்க.

கீழ இருந்து மேல வளர்ந்து வந்து ஒருத்தன் மாஸா இருக்குறது ரசிகர்கள் மத்தியில எப்பயுமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கு.தமிழ் சினிமாவுல அப்படி டான் ஆகி ரசிகர்கள் மனசுல நீங்கா இடம் பிடிச்ச சில மும்பை டான்கள் பத்தின ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது.பல ஹிட் படங்கள் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களை கொடுத்த மும்பைல உருவான தமிழ் Don-கள் யார் யாருன்னு இப்போ பார்க்கலாம்

நாயகன் - உலகநாயகன் கமல்ஹாசன் - வேலு நாயக்கர்

தன்னோட ஏரியாவுல ஆரம்பிக்கிற சின்ன சின்ன விஷயங்கள் தட்டி கேட்டு மக்களுக்காக ஒரு தலைவனா எழுந்து நின்னு தவறுகளை தட்டிகேக்குற Don-ஆ வளர்ந்து நிப்பாரு கமல்ஹாசன்.இன்னைக்கு எடுக்குற பல டான்,கேங்ஸ்டர் படங்களுக்கு inspiration-ஆ இந்த படம் இருக்குறது தான் இந்த படத்தோட பெரிய வெற்றி.

பாட்ஷா - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - மாணிக் பாட்ஷா

பம்பாய்ல இருக்குற மக்களுக்காக நடக்குற தப்புகளை தட்டிக்கேட்டு தப்பான டான்களுக்கு எதிரா ஒரு மாஸான Don-ஆ அவதரிச்சு , பல நல்லது பண்ற மாணிக்கம் என்ற மாணிக் பாட்ஷாவா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தியிருப்பாரு,பெரிய கமர்ஷியல் வெற்றியடைஞ்ச இந்த படம் , பல கமர்ஷியல் படங்களுக்கும் எடுத்துக்காட்ட இருந்துருக்கு

ஜனா - அஜித்குமார் - ஜனா 

மும்பைல இருக்குற போலீஸோட பையனா இருக்குற ஒருத்தன் மக்களோட பிரச்சனைகளை தீர்க்க டான் ஆக அவதரிக்கும் கதை . அஜித் தன்னோட ஸ்டைலான நடிப்பால டான் கதாபத்திரம் தன்னால பண்ண முடியும்னு காட்டுன படம்.பாக்ஸ் ஆபிஸ்ல பெரிய வெற்றி அடையாட்டியும் அஜித்தோட முதல் டான் படம் இதுதான்.

தலைவா - தளபதி விஜய் - விஷ்வா

தன்னோட அப்பா ஒரு டான் அப்படிங்கிறது தெரியாம வெளிநாட்ல இருந்து இந்தியாவுக்கு வர ஹீரோ , அவரோட மறைவுக்கு பிறகு மக்களுக்காக டான் ஆக உருவெடுக்கும் கதை தான் தலைவா.பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகி பாக்ஸ்ஆபிஸ்ல பெரிய சாதனை படைக்காட்டியும் தமிழ் டான்ல ஒரு ஸ்பெஷல் டான் ஆக விஜயின் விஷ்வா கதாபாத்திரம் இருக்கும்

அஞ்சான் - சூர்யா - ராஜு

ரெண்டு நண்பர்கள் சேர்ந்து சின்ன சின்னதா ஆரம்பிச்சு எப்படி மும்பைல முக்கியமான டான் ஆக உருவெடுக்குறாங்க அப்படிங்கறது தான் இந்த படத்தோட கதை.படம் பெரிய வெற்றி படம் இல்லேன்னாலும் பல காரணங்களால இந்த படம் பலருக்கும் Favourite ஆ இருக்கு

காலா - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - கரிகாலன்

தாராவி மக்களுக்கு பாதுகாப்பா இருக்குற ஒரு தலைவன் , அந்த மக்களோட நிலத்தை எப்படி அரசியல்வாதிங்க கிட்ட இருந்து காப்பாத்துறாரு , அதை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்துறாரு அப்படிங்கிறது தான் இந்த படத்தோட கதை.

வெந்து தணிந்தது காடு - சிலம்பரசன் TR - முத்துவீரன்

திருநெல்வேலில இருந்து மும்பைக்கு வேளைக்கு போற ஒரு பையன் அடுத்து அங்க நடக்குற விஷயங்களால எப்படி மாஸா ஒரு Don-ஆ Form ஆகுறான் அப்படிங்கிறது தான் படத்தோட கதை.இந்த படத்தை பார்க்க பல ரசிகர்களும் ஆர்வமாக காத்துகிட்டு இருக்காங்க , படம் நல்ல இருக்கும் சிம்பு இந்த டான் லிஸ்ட்ல இருப்பாருன்னு ரசிகர்கள் நம்பிக்கையோடா காத்துகிட்டு இருக்காங்க.

இதுதவிர இன்னும் நிறைய மாஸான Don-கள் தமிழ் மட்டுமில்லாம பல மொழிகள்லயும் உருவாகியிருக்காங்க.தமிழையும் இன்னும் அனல்பறக்க,ரத்தம் தெறிக்க டான் படங்கள் வெளிவரணும்னு தமிழ் சினிமா ரசிகர்களா ஆசைப்படறோம்.