அடுத்தடுத்து வரிசையாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படமும், தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து பார்டர் & அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் சினம். இயக்குனர் GNR.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள சினம் திரைப்படத்தில் பல்லாக் லால்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி ஆகியோர் சினம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் R.விஜய்குமார் தயாரித்துள்ள சினம் திரைப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவில், A.ராஜாமுஹமது படத்தொகுப்பு செய்ய, ஷபீர் இசையமைத்துள்ளார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வருகிற செப்டம்பர் 16-ம் தேதி சினம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக வெளிவந்த சினம் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சினம் திரைப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள சினம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.