இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இயக்குனராக ஆகச் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்பயணத்தில் மணிமகுடமாக அமைந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கி சாதனை படைத்துள்ளார்.

கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வனை திரை வடிவமாய், மாபெரும் பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (எ) பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி என பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் பிரம்மிப்பான படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை அடித்துள்ளன.

இந்நிலையில் பொன்னியின் செல்வனின் முதல் பாடலாக வெளிவந்து ஹிட்டடித்த பொன்னி நதி பாடல் உருவான சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட நடன ஒத்திகை வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பொன்னி நதி பாடலின் அந்த ரிஹர்சல் வீடியோ இதோ…
 

Ponni nadhi rehearsal video from pooniyin selvan movie enjoyed every minute cherographing this song thank you mani sir 🙏🙏🙏🙏 pic.twitter.com/qA19FgjlTZ

— Brindha Gopal (@BrindhaGopal1) September 14, 2022