தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.

இவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இந்த படத்தினை தயாரித்துளளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் டீஸர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக மற்றும் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.