இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. முன்னதாக இந்த ஆண்டில் (2022) தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து தமன்னா நடித்த F3 படம் கோடை வெளியிடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் கணி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்தார் தமன்னா.

இதனை அடுத்து இதுவரை பெரிதும் பேசப்படாத பெண் பவுன்சர் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்த பப்ளி பவுசர் திரைப்படம் நேரடியாக Disney+ hotstar தளத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் இணைந்து தமன்னா நடித்த பிளான் A பிளான் B திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் நேரடியாக நெட்ஃப்லிக்ஸில் வெளியானது.

அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் போலா ஷங்கர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து போலே சுடியான் எனும் ஹிந்தி படமும், குருதுண்டா சீதாகளம் எனும் தெலுங்கு படமும் விரைவில் ரிலீசாக தயாராகி வருகிறது.மேலும் முதல் முறையாக மலையாளத்துறை உலகில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை தமன்னா முன்னணி மலையாள நடிகர் திலீப்புடன் இணைந்து பந்தரா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

இதனிடையே சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசத்தலான அந்த வீடியோ இதோ…
 

One more visuals from Tammy’s #vaathicoming dance 💃😍🔥 @tamannaahspeaks

Via IG mrKrazyk
Tamannaah Bhatia at #MetaCreatorDay #TamannaahBhatia𓃵 #TamannaahBhatia #Tamannaah pic.twitter.com/FraBLZLZ5T

— Aathavan_Tamannaah☕🖤 (@Aathavan_speaks) October 27, 2022