இதுவரை இந்திய திரை உலகம் கண்டிராத பிரமிப்பின் உச்சமாக அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்களில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக 450 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களில் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக, வில்லன்களாக வரும் ரவிதாசன், சோம்பன் சாம்பவன், தேவராளன் என்கிற பரமேஸ்வரன், வரகுணன் ஆகிய கதாபாத்திரங்களில் கிஷோர், ரியாஸ்கான், வினய் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தனது இசையால் மற்றொரு தளத்திற்கு எடுத்து சென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையாலும் பாடல்களாலும் மாயஜாலத்தை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைப்பணிகளின் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பக்கபலமாக இருந்த மொத்த இசைக்குழுவும் ஒன்றிணைந்த வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் அவர்களுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இதோ…
 

#PonniyinSelvan success party happened yesterday night with music team🎶❣️
The movie deserves the biggest success meet with full cast & crew 😌 pic.twitter.com/u9fhvmrZJW

— AmuthaBharathi (@CinemaWithAB) October 27, 2022