தன்னிகரற்ற நட்சத்திரமாகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகராகவும் திகழும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ராஜதந்திரம் வீரா மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர்.

 போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் துணிவு திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கும் துணிவு படத்திற்கு விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக அஜித்குமார் நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனிடைய சென்னை விமான நிலையத்தில் அஜித் குமார் இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…
 

Latest Video Of #Ajith sir From Chennai Airport.#Thunivu #NoGutsNoGlory #Ajithkumar pic.twitter.com/BgMO7tZxQG

— Ajith Network (@AjithNetwork) October 27, 2022