தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வசந்த பாலன் ஆல்பம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இதனை அடுத்து தனது இரண்டாவது திரைப்படமாக வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றது.

தொடர்ந்து வசந்தமான நீ இயக்கத்தில் வெளிவந்த அங்காடித் தெரு திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பல்வேறு விருதுகளையும் வென்றது. தொடர்ந்து அரவான் காவியத்தலைவன் எனும் குறிப்பிடப்படும் திரைப்படங்களை இயக்கிய வசந்தபான இயக்கத்தில் கடைசியாக கடந்த ஆண்டில் (2021) வெளிவந்த திரைப்படம் ஜெயில்.

அடுத்ததாக வெயில் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் வசந்தபாடன் இயக்கம் திரைப்படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார் சமீபத்தில் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனிடையே இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள அநீதி திரைப்படத்தில் தனக்கே உரித்தான மிடுக்கான நடிப்பாலும் மிரட்டலான குரலாலும் ரசிகர்களையும் கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ்  கதாநாயகராக நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் அநீதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், M.ரவிக்குமார் படத்தொகுப்பு செய்யும் அநீதி திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

அநீதி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அநீதி திரைப்படத்தின் முதல் பாடலாக மனதை வருடும் ரம்யமான ஒரு மெலடி பாடல் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Yes, mark the date 🥳 #Aneethi's first single, a soulful melody, will be out on October 31st.#LovewillFlow

A @Vasantabalan1 film!@gvprakash @iam_arjundas @officialdushara @edwinsakaydop @arjunchdmbrm @UBoyzStudios @thinkmusicindia @vanithavijayku1 @TSivaAmma @kaaliactor pic.twitter.com/7HwUujxZIy

— G.V.Prakash Kumar (@gvprakash) October 27, 2022