இயக்குனராக தனது முதல் திரைப்படமான கோமாளி திரைப்படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் லவ் டுடே திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ளார். 

ரசிகர்கள் விரும்பும் பக்கா என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக தயாராகியிருக்கும் லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் UK மற்றும் ஐரோப்பிய ரிலீஸ் உரிமையை அஹிம்ஸா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Would you give your phone to your partner for a day? 📱🤔#AhimsaEntertainment’s next release in UK & Europe (excl. Swiss) is #LoveToday - from the makers of Comali. Laughter guaranteed! 😂@archanakalpathi @Ags_production @pradeeponelife @thisisysr @letscinema @uie_offl pic.twitter.com/YahfYEXCJe

— Ahimsa Entertainment (@ahimsafilms) October 26, 2022