தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து வியாபாரி,படிக்காதவன்,அயன்,பையா,சுறா,சிறுத்தை,வேங்கை,வீரம் என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடிபோட்டு விட்டார் தமன்னா.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்ட தமன்னா.சில ஹிந்தி படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் நடித்த The November story வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் மிகவும் ஆர்வம் காட்டும் தமன்னா.அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.மேலும் பில்லோ சேலஞ் உள்ளிட்ட சில சேலஞ்களையும் பதிவிட்டு வந்தார்.இவை இணையதளங்களில் வைரலாகி வந்தன.

வெங்கடேஷ்,வருண் தேஜ் உள்ளிட்டோருடன் இவர் நடித்த F3 படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்