இந்திய இளம் பெண்..  பாலியல் அடிமையாக ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனையா?

இந்திய இளம் பெண்..  பாலியல் அடிமையாக ஐ.எஸ் அமைப்புக்கு ரூ.3.5 லட்சத்துக்கு விற்பனையா? - Daily news

இந்திய இளம் பெண் ஒருவர், பாலியல் அடிமையாக ஐ.எஸ் அமைப்புக்கு 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் தான், ஐ.எஸ் அமைப்புக்கு பாலியல் அடிமையாக விற்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள மாநிலம்கொச்சியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று, “அதிக சம்பள தருவதாக” ஆசைகாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண்களை அரபு நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் சென்று உள்ளது. 

அத்துடன், “டெய்லரிங், நர்சிங் உள்ளிட்ட வேலைகள்” என்று, சொல்லி இளம் பெண்களை அரபு நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனை செய்யவதாகவும் குற்றம்சாட்டுக்கள் தற்போது எழுந்து உள்ளன.

குறிப்பாக, “சுமார் 100 பெண்களை சிரியா கொண்டுச் சென்று, அங்குள்ள ஐ.எஸ் அமைப்பினருக்கு பாலியல் அடிமைகளாக விற்பனை செய்ததாகவும்” அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

இது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக கேரள போலீசாரும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம் திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்” என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

அத்துடன், “மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அஜுமோன் என்பவர் மட்டும் முன் ஜாமீன் கேட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்” செய்து உள்ளார். 

ஆனால், நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காத நிலையில், அவர் எர்ணாகுளம் சவுத் காவல் நிலையத்தில் முன்னதாக சரணடைந்து உள்ளார். 

இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “அஜுமோன் மீது ஆள் கடத்தல் பிரிவான ஐ.பி.சி 370 படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், “துபாய், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  கேரளாவுக்கு திரும்பிய கொச்சியை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த மாதம் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்” என்கிற தகவலும் தற்போது கிடைத்து உள்ளன.

அந்த புகாரின் பேரிலேயே போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர் என்றும், வளைகுடா நாடுகளில் அடிமை வேலைக்கு விற்கப்படும் பெண்களில் சிலரை தான், சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 

முக்கியமாக, “வீடுகளில் அடிமை வேலைக்கு மறுக்கும் பெண்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர் என்றும், அந்த இளம் பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது பாலியல் இச்சைகளுக்கு முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றும், அதிர்ச்சி தகவலும் இந்த விசாரணையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இப்படியாக, “எத்தனை பெண்கள் இந்த மாதிரியாக விற்கப்படுகிறார்கள்? என்கிற விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

ஆனால், இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனால், கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பெண் பிள்ளைகளை வேலைக்காக அனுப்பி வைத்துள்ள பெற்றோர்கள் கடும் பீதியடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment