தமிழ் சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா.படத்திற்கு படம் ஒரு வித்தியாசம் என்று ரசிகர்களுக்காக ஏதேனும் ஒரு விஷயத்தை புதுமையாக செய்யவேண்டும் என்று போராடும் குணமுடையவர் சூர்யா.1997-ல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா.இந்த படத்தில் இவருக்கு பல விமர்சனங்கள் எழுந்தன ஆனால் அதனை தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவதரித்துள்ளார் சூர்யா.

நேருக்கு நேர் படத்தை தொடர்ந்து ரொமான்டிக் ஹீரோவாக அவதரித்து வந்த சூர்யாவிற்கு பாலாவின் நந்தா படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்து.இந்த படத்திற்கு பிறகு சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக அவதரிக்க தொடங்கினார்.தொடர்ந்து பேரழகன் போன்ற வித்தியாசமான படங்களில் நடிப்பதையும் சூர்யா தவிர்க்கவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த கஜினி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்று இவரை வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது.இதனை தொடர்ந்து கெளதம் மேனனுடன் இவர் நடித்த காக்க காக்க திரைப்படம் இவரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது.இதனை தொடர்ந்து சில்லுன்னு ஒரு காதல்,வேல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார் சூர்யா.வாரணம் ஆயிரம் படம் இவருக்கு மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்து விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக இது மாறியது.

இதனை தொடர்ந்து 2009-ல் வெளியான அயன் படம் இவரை வசூல் நாயகனாக உயர்த்தியது,தொடர்ந்து இவர் நடித்த சிங்கம் திரைப்படம் இவரை முன்னணி நடிகராக அமர்த்தியது.இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சிங்கம் 2,சிங்கம் 3,தானா சேர்ந்த கூட்டம்,மாஸ் என்று சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார் சூர்யா.அடுத்ததாக இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.படத்தில் நடிப்பதை தவிர அகரம் மூலம் பல மாணவர்களை சூர்யா படிக்கவைத்து வருகிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.இன்று சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள்,பிரபலங்கள் மற்றும் பலரிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.இவர் நடித்து வரும் படங்களில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர்கள்,வீடியோக்கள் வெளியாகை வருகின்றன.இதனை தவிர ரசிகர்கள் பல நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக சூர்யா தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy to be here and meet you all. Let's spread love and positivity!! #Staysafe #LoveUall

A post shared by Suriya Sivakumar (@actorsuriya) on