தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும்,விமர்சகர்களிடமும் இந்த நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனாவும் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி அசத்தியிருப்பார்.அப்பா மகள் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடல் யூடியூப்பில் செம வைரல் ஆனது.குறிப்பாக ஆராதனாவின் மழலை மாறாத குரல் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.குழந்தைகளும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தனர்.

இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை புடைத்திருந்தது.இதனை தொடர்ந்து சமீபத்தில் 1 மில்லியன் லைக்களை பெற்று மேலும் ஒரு சாதனை புடைத்திருந்தது.இந்நிலையில் தற்போது இந்த பாடல் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனது முதல் பாடலிலேயே பல சாதனைகளை படைத்தது ஆராதனா சிக்ஸர் அடித்துள்ளார் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.விரைவில் இந்த பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.