தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். முன்னதாக சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வெறும் 3 நிமிடங்களில் ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தார் சூர்யா.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஈசிஆரில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. ராதே ஷ்யாம் திரைப்படத்தை தயாரித்த  UV கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இதனிடையே நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா குடும்பத்துடன் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர். தங்களது பரபரப்பான வேலைகளுக்கு நடுவில் குடும்பத்துடன் சந்தோஷமாக சுற்றுலாவில் நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களது ஜாலி ட்ரிப் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)