சினிமா ரசிகர்கள் விரும்பும் வித்தியாசமான என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு(2021) இறுதியில் நடிகர் சிலம்பரசன்.T.R. நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டராக, இந்த ஆண்டில்(2022) வெளிவந்த மன்மதலீலை படமும் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இதனையடுத்து தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழும் நடிகர் நாக சைதன்யா, வெங்கட்பிரபுவின் 11வது படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நாக சைதன்யாவின் 22வது திரைப்படமாக, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாராகும் #NC22  திரைப்படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

#NC22 திரைப்படத்தில் பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் #NC22 திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜூன் 23ஆம் தேதி #NC22 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற படப்பூஜையில் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெங்கட் பிரபுவின் #NC22 படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
 

An Auspicious start to the Most Exciting Journey🔥

Elated to Kickstart the ambitious #NC22 with a Pooja Ceremony 🪔

Clap 🎬 by #BoyapatiSreenu

Camera🎥 switch on by @RanaDaggubati#NC22Begins #VP11 @chay_akkineni @vp_offl @IamKrithiShetty @Ilaiyaraaja @thisisysr @SS_Screens pic.twitter.com/VZXfm5C2VF

— Srinivasaa Silver Screen (@SS_Screens) June 23, 2022