12 ஆம் வகுப்பு மாணவனுக்கு திருமணம் நடந்த நிலையில், மகன் பள்ளிக்கூடம் சென்றதும் வீட்டில் தனியாக இருந்த மருமகளை, மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

தாய் இல்லாத நிலையில், தந்தையும் - மகனும் சாப்பாட்டிற்கு சற்று சிரமப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனுக்கு அவரது தந்தை முறைப்படி திருமணம் செய்து வைத்தார். 

திருமணத்திற்கு பிறகு, சில நாட்கள் கழித்து அந்த 12 ஆம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் படிப்பதற்காக, தனது பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அவரது மனைவியான 21 வயதான அந்த இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் மாமனார், தனது மருமகள் மீது சபலப்பட்டு அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மருமகள் தனது மாமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சண்டை போடவே, அவர் தற்போது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கணவனிடம் இது குறித்து அந்த பெண் புகார் கூறவே, கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது தந்தையுடன் சண்டைக்கு சென்று உள்ளார். அப்போது, தனது மகனுக்கும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மகன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக மாமனார் மீது புகார் அளித்த அந்த மருமகள், “எனது மாமனார் பல சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், குடும்ப உறுப்பினர்களை அவர் அந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி வருவதாகவும், அதன் படியே என்னையும் அவர் பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்” என்றும், அங்குள்ள குணா மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அத்துடன், “குடும்பத்தில் இருக்கும் பல பெண்களையும், என் மாமனார் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், தற்போது அவர்களை எல்லாம் என் மாமனார் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்” பாதிக்கப்பட்ட அந்த மருமகள் தனது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனார் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த நபரை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.