போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண்ணை, ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண், படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

அப்படியான நேரத்தில் இந்த இளம் பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலமாக ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான தஜ்வீர் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலமாக அடிக்கடி சாட் செய்து வந்தனர். அதன் பிறகு, இந்த இளம் பெண்ணும், அந்த இளைஞனும் நெருங்கிய நண்பர்களாக மாறிப்போனார்கள். 

இருவருக்குமான இந்த நட்பில், புதிய நண்பன் தஜ்வீர், மிகவும் நல்லவர் என்றே அந்த இளம் பெண் நம்பியிருக்கிறார்.

அந்த சூழலில் தான், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக அந்த இளம் பெண் விண்ணப்பித்து இருந்தார்.

அதன் படியே, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வானது ஆக்ராவில் நடைபெற இருந்த நிலையில், இது குறித்து அந்த பெண் தனது ஆன்லைன் நண்பனிடம் கூறியிருக்கிறார்.

அப்போது, “நீ தேர்வு எழுத உங்கள் ஊரில் இருந்து பேருந்தில் செல்ல வேண்டாம் என்றும், நான் கார் கொண்டு வருகிறேன் நாம் அதில் போகலாம்” என்றும் ஆன்லைன் நண்பன் தஜ்வீர் கூறியிருக்கிறார்.

அதற்கு, அந்த இளம் பெண்ணும் “சரி” என்று சொல்லி இருக்கிறார். 

இனையடுத்து, அந்த ஆன்லைன் நண்பன் சொன்னபடியே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அவர் காரில் வந்திருக்கிறார். இதனால், அந்த இளம் பெண்ணும், அந்த காரில் நம்பி ஏரி இருக்கிறார். 

அதன்படியே, அந்த இளம் பெண் ஆக்ராவில் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புவதற்காக அந்த காரில் மீண்டும் ஏறி உள்ளார்.

அப்போது, காரில் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு வந்த தஜ்வீர், திடீரென்று தனது காரிலேயே போதைப் பொருள் ஒன்றையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். 

அடுத்த சிறிது நேரத்துக்குப் பிறகு, தன்னுடன் வந்த அந்த இளம் பெண்ணிடம், ஓடும் காரிலேயே அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஆனால், இதற்கு அந்த இளம் பெண் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கதறி அழவே, அந்த ஆன்லைன் நண்பன் அந்த பெண் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

அதனையடுத்து, தனது காரை டெல்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் கோசிகாலா என்ற பகுதியில் நிறுத்தி, அந்த அளம் பெண்ணை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று இருக்கிறார். 

அங்கிருந்து வீடு திரும்பிய அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்று உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண்ணை மீட்ட அவரது குடும்பத்திர், அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலைக்கு முயன்றது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தியபோது, தனக்கு நேர்ந்த பாலியல் அவலம் குறித்து அந்த பெண் கூறியிருக்கிறார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆன்லைன் நண்பன் தஜ்வீரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது, இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.