"தமிழன்டா" எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... காரணம் என்ன? விவரம் இதோ!

செங்கோல் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்,Super star rajinikanth thanks pm modi for making tamilans proud with sengol | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய நாடாளும‌ன்றத்தை அலங்கரிக்க போகும் செங்கோல் பற்றி “தமிழன்டா” என குறிப்பிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதும் பணிகள் நிறைவடைந்து இன்று மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறந்து வைக்கப்படுகிறது. சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் முக்கோண வடிவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் என்ற நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கிறார். இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி மும்மரமாக தான் திறந்து வைக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக, திருநாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதில் மற்றொரு முக்கிய அம்சமாக இந்தியா சுதந்திரம் அடைந்த போது பிரிட்டிஷ்காரர்கள் அதனை அடையாளப்படுத்தும் விதமாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய செங்கோல் தற்போது புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவப்பட இருக்கிறது. இதுகுறித்து பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் குவிந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழ்நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜொலிக்க போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். #தமிழன்டா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த பதிவு இதோ…

இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.#தமிழன்டா

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

— Rajinikanth (@rajinikanth) May 27, 2023

இதனிடையே தற்போது தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் கபில் தேவ் அவர்களும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இதனை அடுத்து தனது திரை பயணத்தில் 170-வது திரைப்படமாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குகிறார். லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பு உருவாக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!