'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!

மாமன்னன் பட இரண்டாவது பாடல் குறித்த ஸ்பெஷல் அப்டேட்,udhayanidhi stalin maamannan movie second single jigu jigu rail a r rahman | Galatta

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மரண மாஸ் ஸ்டைலில் மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மே 27ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளிவர இருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களின் இதயங்களை இசைப்புயலாக மையம் கொண்டு இசையை மழையாக கொடுத்து மகிழ்வித்து வரும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிப்பில் தயாராகி வரும் ஆடுஜீவிதம், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வரும் லால் சலாம், சிவகார்த்திகேயன் நடிப்பில் பக்கா ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமாக தயாராகி இருக்கும் அயலான் மற்றும் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் தயாராக இருக்கும் KH234 ஆகிய படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்த வரிசையில் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்து இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜின் மிக முக்கிய படைப்பு தான் மாமன்னன். முன்னதாக பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால் ரசிகர்களின் கவனத்தையும் திரை உலகினரின் பாராட்டுகளையும் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் மாமன்னன் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். எனவே முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம்  தான் மாமன்னன். 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான “ராசா கண்ணு” ரசிகர்களின் இதயத்தை நேராக சென்றடைந்தது. காரணம் இசைப்புயல் இசையில் மனம் உருகி வைகைப்புயல் பாடிய ராசா கண்ணு பாடல் மிக ஆழமாக மக்களை மனதில் பதிந்தது. 

இதனை அடுத்து தற்போது மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மே 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஸ்பெஷல் அறிவிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில் பக்கத்தில் "ஏ நண்பா ஏலே நண்பா நீ தெம்பா ஏறு நண்பா" என பாடலின் வரிகளை குறிப்பிட்டு நாளை மே 27ஆம் தேதி காலை 11 மணியளவில் மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளிவரும் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த இரண்டாவது பாடலின் பெயரான “ஜிகு ஜிகு ரயில்” என்பதை அறிமுகப்படுத்தும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் செம ஸ்டைலாக இருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் இதோ…
 

“ஏ நண்பா
ஏலே நண்பா
நீ தெம்பா
ஏறு நண்பா”
Second single from #MAAMANNAN @arrahman’s Reggae🔥 #JiguJiguRail from tomorrow 11AM

@Udhaystalin#Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_@editorselva ⁦⁩ ⁦@SonyMusicSouthpic.twitter.com/ubSfg04bKA

— Mari Selvaraj (@mari_selvaraj) May 26, 2023

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!

பிசாசு 2, விஜய் சேதுபதியுடன் புதிய படம்... இயக்குனர் மிஷ்கின் கொடுத்த அட்டகாசமான அப்டேட்! வைரல் வீடியோ உள்ளே
சினிமா

பிசாசு 2, விஜய் சேதுபதியுடன் புதிய படம்... இயக்குனர் மிஷ்கின் கொடுத்த அட்டகாசமான அப்டேட்! வைரல் வீடியோ உள்ளே