ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!

ஜீவி பிரகாஷின் அடியே பட முதல் பாடலான வா செந்தாழினி பாடல் வெளியீடு,gv prakash kumar in adiye movie first single vaa senthaazhini lyric video | Galatta

தொடர்ந்து பல்வேறு விதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஜீவி பிரகாஷ் நடிப்பில் அடுத்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகி இருக்கும் அடியே திரைப்படத்திலிருந்து முதல் பாடலான வா செந்தாழினி பாடல் தற்போது வெளியானது.  இசையமைப்பாளராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல ஃபேவரட் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் அசத்தி வருகிறார். அந்த வகையில், இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் அடியே. ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் அடியே திரைப்படத்தில் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடியே திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து பயங்கர ட்ரெண்ட் ஆனது. அட்றாசிட்டிகள் நிறைந்த மோஷன் போஸ்டராக வெளிவந்த அடியே படத்தின் மோஷன் போஸ்டரின் ஆரம்பத்தில் செல்போன் மாதிரியான ஒரு பொருள் காட்டப்படுகிறது. அதில் பயனாளர் மல்டிவெர்சில் பயணம் செய்ய தயார் என காட்டுகிறது. 

தொடர்ந்து அந்த மோஷன் போஸ்டரில் நாம் தமிழர் கட்சியின் சீமான், இலங்கை பிரதமர் சீமான் என்றும் , தளபதி விஜய் - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்காமல் கைவிடப்பட்ட யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தின் 150 வது நாள் என்றும், ஃபார்முலா 1 பந்தயத்தில் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அஜித்குமார் என்றும்,  நடிகர் சங்க கட்டிடத்தை விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார் என்றும், 7 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற RCB அணிக்கும் CSK அணிக்கும் போட்டி என குறிப்பிட்டுள்ள ஒரு டிஜிட்டல் ஸ்கிரீனில் தோனி RCB அணிக்கு கேப்டனாக விளையாடுவது போலவும் CSK அணிக்கு கேப்டனாக தல கேதார் ஜாதவ் என்றும், சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் பேரரசுவின் 3.0 என்றும் இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பறக்கும் பாராஷூட்களும் அடியே திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் கவனத்தை ஏற்படுத்தியது.

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த அடியே திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தய்யன் படத்தொகுப்பு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.  இந்நிலையில் அடியே திரைப்படத்தின் முதல் பாடலான "வா செந்தாழினி" எனும் பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரொமான்டிக்கான அந்த லிரிக் வீடியோ இதோ… 

 

இதுபோக இசையமைப்பாளராக, கேப்டன் மில்லர், மார்க் ஆண்டனி, தங்கலான், வாடிவாசல், ஜப்பான், அநீதி, சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  
 

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!
சினிமா

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் புதிய பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான GLIMPSE இதோ!