"அஞ்சலியின் 50வது படம்!"- ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

அஞ்சலியின் 50வது படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு,actress anjali 50th movie eegai first look poster out now | Galatta

தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அஞ்சலியின் திரைப் பயணத்தில் 50வது திரைப்படமாக தயாராகும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த போட்டோ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். இதனை அடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த நடிகை அஞ்சலியின் நடிப்பு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அங்காடி தெரு திரைப்படத்திற்காக பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்ற நடிகை அஞ்சலி தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் தனது 50வது படமாக நடித்த மங்காத்தா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தொடர்ந்து இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு பிறகு மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்த நடிகை அஞ்சலி தொடர்ந்து அரவான், கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, இறைவி, பலூன், பேரன்பு, சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த நிசப்தம் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்த நடிகை அஞ்சலி நடிப்பில், தெலுங்கில் கடைசியாக வக்கீல் சாப் (மேற்கொண்ட பார்வை ரீமேக்) கன்னடத்தில் கடைசியாக பைராகி ஆகிய படங்கள் வெளிவந்தன. முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான இரட்ட படத்திலும் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, தயாராகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவீன் பாலி - சூரியுடன் இணைந்து ஏழு கடல் ஏழுமலை படத்தில் அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி பாவக் கதைகள் & நவரசா ஆன்தாலஜி வெப் சீரிஸ்களிலும் கடந்த ஆண்டு வெளிவந்த ஃபால் வெப் சீரிஸிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வரிசையில் தனது திரைப்பயணத்தில் 50வது படமாக அஞ்சலி நடிக்கும் புதிய படத்திற்கு ஈகை என பெயரிடப்பட்டுள்ளது. சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நடிகை அஞ்சலி நடிக்கும் 50 வது படமான இந்த ஈகை திரைப்படத்தை இயக்குனர் அசோக் வேலாயுதம் எழுதி இயக்குகிறார். கிரீன் அம்யூஸ்மென்ட் ப்ரொடக்ஷன் மற்றும் டி3 ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்த ஈகை திரைப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தரண் குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வரிசையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஞ்சலியின் 50வது திரைப்படத்தை அறிமுகம் செய்யும் வகையில் ஈகை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் ஈகை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Happy to Launch the @yoursanjali 's 50th Film #𝗘𝗲𝗴𝗮𝗶 ⚖️ First Look Poster #EegaiFirstLook all da best team!!

⭐️ing @yoursanjali @YoursKashyap @VijaytvpugazhO@imharibunty @Abinakshatra @Nishanth25r @chandarr1398117

🎬 @Ashokdirector01
🎥 @Sridhar_DOP
🎹… pic.twitter.com/oC1crqYg5V

— venkat prabhu (@vp_offl) May 27, 2023

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே
சினிமா

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே