கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ,Director atlee and wife priya on cannes film festival red carpet | Galatta

சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான கேம்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்பட்டில் செம கிளாஸாக என்ட்ரி கொடுத்த இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆரம்ப கட்டத்தில் இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனராக பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறை கைகோர்த்த அடலீ இயக்கி தெறி படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து, தளபதி விஜயை வைத்து ஹாட்ரிக் மெகா ஹிட் கொடுத்த அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார். 

இதனை அடுத்து தற்போது முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தனது முதல் ஹிந்தி திரைப்படமாக இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கானுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் தளபதி விஜய் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லீ காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன் திரைப்பட விழாவில் இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் கலந்து கொண்டனர். உலக அளவில் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாக்களின் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் உலகம் முழுக்க சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அணிவகுப்பு செய்வது வழக்கம். இந்த 2023 ஆம் ஆண்டு கடந்த மே 16ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா சார்பாகவும் பல பிரபலங்கள் ரெட் கார்ப்பட்டில் அணிவகுத்த நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இருவரும் கிளாஸாக கருப்பு நிற உடைகளில் வருகை புரிந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இயக்குனர் அட்லீயின் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

As cameras flashed amidst the glitz & glam, Director @Atlee_dir & @priyaatlee graced the red carpet at the prestigious Cannes Film Festival on May 21st 🖤#TheRouteTalent #CannesFilmFestival #Atlee pic.twitter.com/eakjAghQhU

— TheRoute (@TheRoute) May 26, 2023

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

'ஏ நண்பா ஏலே நண்பா!'- மரண மாஸ் ஸ்டைலில் ARரஹ்மான்... மாமன்னன் பட 2வது பாடல் குறித்த அட்டகாசமான அப்டேட் இதோ!

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே
சினிமா

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!
சினிமா

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!