'தி கேரளா ஸ்டாரி' இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. – விவரம் உள்ளே..

தி கேரளா ஸ்டோரி இயக்குனர் திடீர் உடல் நல குறைவு அதிர்ச்சியில் ரசிகர்கள் விவரம் உள்ளே - The kerala story director Hospitalised | Galatta

கடந்த மே மாதம் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவை சேர்ந்த இந்து மத பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இஸ்லாமிய மக்களை இழிவு படுத்துவதாக சொல்லி படத்தை தடை செய்ய பல அமைப்பினர்கள் ஆர்பாட்டம் செய்தனர். மேலும் வங்க தேச மாநிலங்களில் இப்படத்திற்கு தடையும் விதிக்கபட்டது, தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவு தராததால் இப்படம் ஒரே நாளில் மாற்றப்பட்டது. இருந்தும் வட இந்தியாவில் கிடைத்த வரவேற்பு இப்படத்தை 37 நாடுகளில் ரிலீஸாக வைத்தது. இந்நிலையில் தடைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 18 நாட்களில் 200ரூ கோடிக்கும் மேல் உலகளவில் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சுதிப்டோ சென் திடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. இது தொடர்பாக விசாரிக்கையில் இயக்குனர் சுதிப்டோ சென் கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி தி கேரளா ஸ்டோரி படத்தின் விளம்பர வேலையில் இருந்ததாலும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எழுந்த பிரச்சனை காரணத்தினால் வந்த மன அழுத்தத்தினாலும் அவருக்கு உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதற்காக வீட்டிலே சிகிச்சை பெற்று வந்ததாக தகவல். இந்நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரசிகர்கள் இயக்குனர் சுதிப்டோ சென் பூரண குணமடைய பிராத்தனைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படத்தின் நாயகி அடா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சுதிப்டோ சென் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் “சார் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். உங்களுடைய் அடுத்த ஆச்சர்யமளிக்க கூடிய படத்தின் அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடா ஷர்மா பதிவும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Get well soon @sudiptoSENtlm sirrr 🌸everyone is waiting to get surprised (shocked/gladdened not sure which adjective is appropriate 😬) with your next announcement ❤️ #TheKeralaStory 4th Saturday see you all in theatres !! pic.twitter.com/cBHsglu3US

— Adah Sharma (@adah_sharma) May 27, 2023

 

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

இரண்டாவது திருமணம் ஏன்? முதல் முறையாக மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி.. - வைரலாகும் வீடியோ இதோ..

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

ஐ.பி.எல் இறுதி போட்டியில் மேடையேறும் தளபதி விஜய் பட பாடகி.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..

சினிமா

"ரசிகருக்கு பிடிக்காதுனு GVM கிட்ட சொன்னேன்.." பச்சைக்கிளி முத்துச்சரம் படம் குறித்து நடிகர் சரத்குமார்..- முழு நேர்காணல் இதோ..