சிவகார்த்திகேயனின் Sci Fi திரைப்படமான ‘அயலான்’ டீசர் எப்போது.? – ரசிகர்களால் வைரலாகும் படக்குழுவின் அறிவிப்பு இதோ..

சிவகார்த்திகேயனின் அயலான் பட டீசர் அப்டேட் வெளியானது விவரம் உள்ளே - Sivakarthikeyan ayalaan teaser update | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படமாக உருவாகி வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அயலான்’. 24AM ஸ்டுடியோ மற்றும் KJR ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ஆர் ரவிகுமார் இயக்கி வருகிறார். படத்தின் கதாநயாகனாக சிவகார்த்திகேயன் நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கருணாகரன், பானுபிரியா, யோகிபாபு, ஷரத் கேல்கர், இஷா கோபிகர் ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்கிறார் ரூபன். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் வேற லெவல் பாடல் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் முதல் பார்வை டீசரை படக்குழு அதிரடியாக வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்தனர்.    

Sci Fi திரில்லர் திரைப்படமாக உருவாகும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் ஏலியன் அனிமேஷன் வேலைகள் 4500 க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் உள்ளதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது, இதற்கான விளக்கம் கொடுத்து அறிக்கையும் படக்குழு சார்பில் முன்னதாக வெளியிடப்பட்டது.  இறுதி கட்ட வேலையில் அயலான் திரைப்படம் உள்ள நிலையில் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, “இந்த தீபாவளி பட்டாசுகளை விட மேலான விஷயங்களை திரையரங்குகளில் காண்பீர்கள்.. அயலான் டீசர் பூமிக்கு வந்து கொண்டிருக்கிறது” என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

This Diwali, get ready for more than just fireworks in theatres 🧨#Ayalaan 👽🛸 Teaser En route to Earth 🌍

— KJR Studios (@kjr_studios) May 27, 2023

இந்த பதிவின் படி இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அயலான் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவின் பதிவை மிகப்பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14 ம் தேதி மண்டேலா இயக்குனரின் அடுத்த படைப்பாக உருவாகி உள்ள ‘மாவீரன்’ வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து இந்த ஆண்டே தீபாவளியில் ‘அயலான்’ வெளியாகவுள்ளது. இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அடுத்தடுத்த அப்டேட் வந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். 

“எல்லாம் மாறும்.. உள்ளம் சேர்ந்தா..” மனதை மயக்கும் ஏ.ஆர் ரஹ்மான் குரலில் வெளியான மாமன்னன் 2nd single.. – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“எல்லாம் மாறும்.. உள்ளம் சேர்ந்தா..” மனதை மயக்கும் ஏ.ஆர் ரஹ்மான் குரலில் வெளியான மாமன்னன் 2nd single.. – வைரலாகும் வீடியோ உள்ளே..

சூர்யவம்சம் 2 கதை இது தான்.. நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான தகவல்.. -  முழு வீடியோ உள்ளே..
சினிமா

சூர்யவம்சம் 2 கதை இது தான்.. நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான தகவல்.. - முழு வீடியோ உள்ளே..

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட படக்குழு.. - மனதை மயக்கும் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் அடுத்த பாடலை வெளியிட்ட படக்குழு.. - மனதை மயக்கும் அட்டகாசமான பாடல் இதோ..