'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த லெஜண்ட் சரவணனின் வீடியோ,legend saravanan mass entry in wedding reception goes viral | Galatta

தமிழ் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கைக்கும் கடின உழைப்புக்கும் பெரும் எடுத்துக்காட்டாகவும் தமிழ் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனத்தின் நிறுவனராகவும் திகழ்பவர் லெஜண்ட் சரவணன். பல முன்னணி தொழில் நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களது நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் தாங்களே நடிக்க, முக்கிய காரணமாக அமைந்தவர் லெஜண்ட் சரவணன். தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் தானே நடித்து புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த சரவணன், அதைத் தொடர்ந்து தன் மீது வீசப்பட்ட பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்கி, அதைப் பற்றி துளியும் கவலைப்படாதவராய் தொடர்ந்து தனது விளம்பர படங்களில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக மிகப் பிரபலமடைந்தார்.  

இதன் தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் லெஜண்ட் சரவணன். முன்னதாக உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கும் தி லெஜன்ட் திரைப்படத்தின் மூலம் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடிக்க, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்த தி லெஜண்ட் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது போல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி பேன் இந்தியா படமாக ரிலீஸான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நாளுக்கு நாள் தி லெஜண்ட் திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து தான் வந்தது. மேலும் தக லெஜண்ட் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு OTT ரிலீஸுக்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காலத்தில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக தி லெஜண்ட் நடிக்கும் புதிய படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த லெஜண்ட் சரவணன் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அசத்தலான புதிய லுக்கில் வந்த லெஜண்ட் சரவணன் அவர்களை சூழ்ந்த ரசிகர்கள் அவரோடு உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட லெஜண்ட் சரவணன் அவர்கள் “அன்பான ரசிகர்களுடன்…” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தன்னுடைய விலை உயர்ந்த Rolls- Royce காரில் பக்கா ஸ்டைலான உடையில் செம்ம மாஸாக என்ட்ரி கொடுத்த லெஜன்ட் சரவணன் அவர்களின் அந்த வீடியோ சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

அன்பான ரசிகர்களுடன்…. pic.twitter.com/nt5FZlcwyj

— Legend Saravanan (@yoursthelegend) May 26, 2023

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே
சினிமா

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஷூட்டிங்கில் கொண்டாட்டம்... KGF, காந்தாரா தயாரிப்பாளரின் முதல் தமிழ் படம்! வைரல் புகைப்படங்கள் உள்ளே

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!
சினிமா

பிரபாஸின் அதிரடியான சலார் பட படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த ஸ்ரியா ரெட்டி… வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜயின் மேலாளரான லியோ பட இணை தயாரிப்பாளரின் புதிய படத்தில் அனிருத்... அடுத்த ட்ரெண்டிங் பாடலின் கலக்கலான GLIMPSE இதோ!