இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்கள் ரிலீஸாகும் நாட்கள் திரையரங்குகளில் தீபாவளி தான்.  கடைசியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு (2021) தீபாவளி வெளியீடாக ரிலீஸானது இதனையடுத்து அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தில் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதல் முறையாக ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை தயாரிக்கிறார்.

படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்திருக்கும் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி மற்றும் ராக்கி படங்களில் நடித்த வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் கலை இயக்குனரான DRK.கிரண், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

One of the BEST moment, pala varuda KANAVU🤩.. so sweet you sir @rajinikanth ,last 2days m hearing ur voice “so sweet”🤩😎😍🙏 #jailer thanks again my dear darling @Nelsondilpkumar 😍😘 @sunpictures #thalaivar #thalaivar169 pic.twitter.com/982M6fXoyq

— drk.kiran (@KiranDrk) October 20, 2022