இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மிப்பின் உச்சமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகெங்கும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவனாகவே வாழ்ந்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தார் நடிகர் கார்த்தி.

அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம்  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட தீபாவளி வெளியீடாக வருகிற அக்டோபர் 21ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 

இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குநர் PS.மித்ரன் இயக்கத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முனிஸ்காந்த், இளவரசு, முரளி சர்மா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.பிரின்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, சர்தார் திரைப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரமான ரித்விக்குடன் இணைந்து கார்த்தி இருக்கும் BTS வீடியோ வெளியானது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் தீம் மியூசிக்கை இருவரும் பாடும் கலக்கலான அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

#Sardar #ShootDiaries
In 2 days makkale 🙏🏼
பத்தவெச்சு பறக்க விடப்போறோம்..💥
@Karthi_Offl#RithuRocks pic.twitter.com/NOXTb3pehz

— PS Mithran (@Psmithran) October 19, 2022