அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இந்திய திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனரான மணிரத்னம் தனது கனவு திரைப்படமாக உருவாக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

2 பாகங்களாக லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸானது. பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று 450 கோடிக்கும மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து 2வது பாகம் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் மிரட்டிய சீயான் விக்ரம் நடித்த போர் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில்,  பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற அந்த போர் காட்சிகளுக்காக விக்ரம் வால் வீசி பயிற்சி செய்யும் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ...
 

#PonniyinSelvan : #AdithaKarikalan rehearsing for war episode@chiyaan #ChiyaanVikram #PS1 #PonniyinSelvan1 pic.twitter.com/TpxdNmklv6

— Kalaiarasan (@ikalaiarasan) October 19, 2022