பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து செல்லமே, காதல், எம்டன் மகன், வெயில், நேபாளி, கண்டேன் காதலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்து தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பரத்.

தற்போது முன்னறிவான் படத்தில் நடித்து வரும் நடிகர் பரத் முன்னதாக தனது திரைப்பயணத்தில் 50வது திரைப்படமாக லவ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் RP.பாலா இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் த்ரில்லர் திரைப்படமாக லவ் திரைப்படம் தயாராகி வரும் நிலையில் யாக்கை திரி மற்றும் 8 ஆகிய திரைப்படங்களும் பரத் நடிப்பில் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்துள்ள திரைப்படம் மிரள். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மிரள் படத்தை மரகதநாணயம் & ராட்சசன் உள்ளிட்ட குறிப்பிடப்படும் படங்களை தயாரித்த AXESS FILM FACTORY நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்கள் தயாரித்துள்ளார்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவில், கலைவாணன்.R படத்தொகுப்பு செய்துள்ள மிரட்டலான த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மிரள் திரைப்படத்திற்கு பிரசாத்.SN இசையமைத்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் மிரள் திரைப்படம் வருகிற நவம்பர் 11ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

It's official - Slasher thriller #Miral in theatres on November 11th. Get ready for the ride on the big screen!

TN release by @SakthiFilmFctry@AxessFilm @Dili_AFF @sakthivelan_b @bharathhere @vanibhojanoffl @ksravikumardir @nameissakthi @itspooranesh @Sethu_Cine @rajNKPK pic.twitter.com/z6fk87QiHR

— Axess film factory (@AxessFilm) October 19, 2022