இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான முதல் உலக கோப்பையை கைப்பற்றியது.இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வு பாலிவுட்டில் 83 என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 83 படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். அஸ்வின் மிஸ்ரா ஒளிப்பதிவில், ப்ரீதம் மற்றும் ஜூலியஸ் பக்கியம் இசையமைத்துள்ளனர். 83 படத்தில் கபில்தேவ்-ஆக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க, கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான ஜீவா, தமிழகத்தை சார்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் 83 வெளியானது. 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள 83 திரைப்படத்தை பார்வையிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “வாவ்… என்ன  திரைப்படம்… அற்புதமான படைப்பு…" என தயாரிப்பாளர்கள், இயக்குனர், கபில்தேவ், ரன்வீர் சிங் மற்றும ஜீவா ஆகியோரை குறிப்பிட்டு, ஒட்டுமொத்த படக்குழுவினரயும் சேர்த்து பாராட்டியுள்ளார்.