10 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை காதலித்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதுவும் அரியலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம், ஆண் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து, சக பெற்றோர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கொந்தளித்து எழுந்தனர்.

இது தொடர்பாக, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள் பலரும், போக்சோ சட்டத்தில் அடுத்தடுத்து வரிசையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், சக மாணவனுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த சம்பவத்தில், பெண் ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது, தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதாவது, அரியலூர் மாவட்டம் அம்பாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை, அந்த பள்ளியின் ஆசிரியர் ராசாத்தி என்ற பெண், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், அந்த 10 ஆம் வகுப்பு மாணவனிடம் காதல் என்ற பெயரில், ஆசிரியை ராசாத்தி, சற்று எல்லை மீறி தவறாக நடக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவன், இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியை ராசாத்தியை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, அந்த ஆசிரியையிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “அந்த ஆசிரியை, அந்த 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்தது உண்மை என்று ஒப்புக் கொண்டதாக” தகவல் வெளியாகி உள்ளன. அதனையடுத்து, அந்த பெண் ஆசிரியரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 

இதனிடையே, 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு, சக வகுப்பு டீச்சர் காதல் டார்ச்சர் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.