சுந்தர் Cயின் தலைநகரம் 2 பட ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல்!
By Anand S | Galatta | June 27, 2022 15:32 PM IST
தமிழ் திரை உலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் காஃபி வித் காதல். ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தில் காஃபி வித் காதல் பிரபல தொகுப்பாளினி DD-திவ்யதர்ஷினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வரும் சுந்தர்.C முன்னதாக நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சுந்தர்.C நடிப்பில் வல்லான் மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் அஜித்குமாரின் முகவரி, சிலம்பரசன்.TRன் தொட்டி ஜெயா சுந்தர்.Cயின் இருட்டு ஆகிய படங்களை இயக்கிய VZ.துரை இயக்கத்தில் மீண்டும் சுந்தர்.C நடிக்கும் திரைப்படம் தலைநகரம் 2. முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு சுந்தர்.C நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தலைநகரம் படத்தின் 2-ம் பாகமாக தற்போது தயாராகும் தலைநகரம் 2 திரைப்படத்தை SM.பிரபாகரன் மற்றும் இயக்குனர் VZ.துரை இணைந்து தயாரிக்கின்றனர்.
சுந்தர்.Cயுடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு, யோகிபாபு, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ரவி மரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் தலைநகரம் 2 திரைப்படத்திற்கு மது.R இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு
(2021) தொடங்கப்பட்ட தலைநகரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Director @vdhorai Directorial #SundarC Starring #Thalainagaram2 Movie Shoot Wrapped@righteye2021 #SMPrabakaran @krishnasamy_e@vichuviswanath#RightEyeTheatres #RSvenkat @maddyraja1 @teamaimpr pic.twitter.com/MYuI7kYhNs
— Team AIM (@teamaimpr) June 27, 2022
Breaking: Sundar C and Ajith's director team up for Thalai Nagaram 2
25/06/2020 07:26 PM
Velvet Nagaram Sneak Peek 01 | Varalaxmi Sarathkumar | Kasthuri Shankar
04/03/2020 09:42 AM
Varalaxmi Sarathkumar's Velvet Nagaram to release on March 6
17/02/2020 05:19 PM