“ஏ, வரியா..” இளைஞனை உல்லாசத்துக்கு அழைத்துச் சென்ற பெண்.. 3 பெண்களுடன் சேர்ந்து பணத்தை பறித்து விரட்டி அடிப்பு! பரபரப்பு..

“ஏ, வரியா..” இளைஞனை உல்லாசத்துக்கு அழைத்துச் சென்ற பெண்.. 3 பெண்களுடன் சேர்ந்து பணத்தை பறித்து விரட்டி அடிப்பு! பரபரப்பு.. - Daily news

பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த இளைஞனிடம், “ஏ, வரியா..” என்று, ஆசைக்காட்டி உல்லாசத்துக்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர், இன்னும் 3 பெண்களுடன் சேர்ந்து அந்த இளைஞனின் பணத்தை பறித்துக்கொண்டு, விரட்டி அடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான சுரேஷ் என்ற இளைஞன், இன்னும் திருமணம் ஆகாத நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார். 

இந்த சூழலில் தான், சுரேஷ் நேற்றிரவு காஞ்சிபுரத்துக்கு செல்லவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துக்காக அங்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சுரேஷிடம் பேச்சுக் கொடுத்து ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. 

அப்போது, சுரேஷை அந்த பெண் உல்லாசத்திற்கு அழைத்த நிலையில், அதில் சுரேஷ்சும் சபலப்பட்டு அந்த பெண்ணுடன் தனியாக சென்று உள்ளார்.

அதன்படி, அந்த பெண் தாம்பரத்தில் ஒரு வீட்டுக்கு சென்று உள்ளார். 

அப்போது, அந்த வீட்டில் ஏற்கெனவே 3 பெண்கள் பதுங்கி இருந்து உள்ளனர். 

அந்த வீட்டிறகுள் சுரேஷ் நுழைந்ததும், அங்கு இருந்த மற்ற 3 பெண்களையும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த சுரேஷ், சற்று சுதாரித்து அங்கிருந்து வெளியே வர முயன்றிருக்கிறார்.

ஆனால், அதற்குள் அந்த 4 பெண்களும் சேர்ந்து, சுரேஷை பிடித்து சரமாரியாகத் தாக்கி உள்ளனர். 

அதன் பிறகு, சுரேஷிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது ஏடிஎம் கார்டுகளை அந்த 4 பெண்களும் சேர்ந்து பறித்து கொண்டு, அவரை விரட்டி விரட்டி உள்ளனர். 

இதனால், தான் ஏமாற்றப்பட்டதைக் கண்டும் கடும் வேதனை அடைந்த சுரேஷ், அந்த பெண்கள் தாக்கிய வேதனையுடனும், காயங்களுடன் அங்கிருந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்து உள்ளார்.

இந்த புகார் குறித்து வழகுப் பதிவு செய்த போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களைய ஆய்வு செய்து வருகின்றனர். 

அத்துடன், சம்மந்தப்பட்ட அந்த தாம்பரம் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, அந்த வீட்டை பூட்டிவிட்டு அந்த பெண்கள் 4 பேரும், அங்கிருந்து தப்பித்து சென்றதும் தெரிய வந்தது. இதனால், தலைமறைவான 4 பெண்களையும் போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஆண்களைப் போல பெண்களும் 4 பேர் சேர்ந்து, திருமணம் ஆகாத ஆணுக்கு ஆசைக்காட்டி, தனியாக அழைத்துச் சென்று, பணத்தை பறித்துக்கொண்டு, அவரையும் தாக்கி விரட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment