தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து பலவிதமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகி அனைத்து சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

முன்னதாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவில், இசைப்புயல் ARரஹ்மான் இசையமைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளிவர உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 1 வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு. 

கார்த்திக் மீடியா ஹவுஸ் சார்பில் இயக்குனர் கார்த்திக் அட்வைத் தயாரித்து இயக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பாயுமொளி நீ எனக்கு திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் அந்த டீசர் இதோ…