தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் அட்லி ராஜாராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி  திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அடுத்தடுத்து தளபதி விஜயுடன் இணைந்த அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் வசூல் சாதனைகள் படைத்தது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.GK விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த 

ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாரூக் கான்-அட்லியின் ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.