பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஆலியா பட் இந்த ஆண்டில்(2022) வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படமான SS.ராஜமௌலியின் RRR திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த கங்குபாய் திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனையடுத்து பிரம்மாண்டமான ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பிரம்மாஸ்திரா மற்றும் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகியிருக்கும் டார்லிங்ஸ் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ஆலியா பட் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. தொடர்ந்து இந்தியில் ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தில் தற்போது ஆலியா பட் நடித்து வருகிறார்.

மேலும் ஹாலிவுட்டில் வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கேல் கெடாட் கதாநாயகியாக நடிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் அதிரடியான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ஆலியா பட் & ரன்பீர் கபூர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இதனைத் அறிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)