தமிழ் திரையுலகில் பிளஸ் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜா. அதன்பிறகு அடாவடி, மதுரை வீரன், வாத்தியார் போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். ஆர்யா நடித்த சேட்டை படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். 

பல படங்களில் நடித்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது. பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் மூலம் அவர் எதிர்பார்த்தது போலவே உலகளவில் உள்ள ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சத்ரு. இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் அடுத்து அடுத்ததாக பல படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கைவசமாக எந்த படமும் இல்லை.

சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை வளர்ப்பு டிப்ஸ், காஸ்ட்டியூம், அழகு குறிப்பு என பயனுள்ள பதிவுகளை பதிவிடும் சுஜாவை பாராட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தின நாளில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்லாக் கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுஜா வருணியின் ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suja varunee official (@itssujavarunee)