17 வயது சிறுவனுடன் 21 வயது இளம் பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

தேனி மாவட்டம் போடி தாலுகாவில் உள்ள பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், அந்த சிறுவன், வீட்டில் தனது பெற்றோருடன் இருந்து வந்தான்.

அப்போது, கடந்த வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து, அப்போதே அங்குள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், புகார் அளித்த ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சிறுவன் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், இந்த மாதம் 1 ஆம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக புகாரைப் பதிவு செய்த அதிகாரிகள், காவல் நிலையத்தில் அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, வழக்கைத் தீவிரப்படுத்திய
காவல் துறையினர், இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அந்த சிறுவன், 21 வயது இளம் பெண்ணுடன் தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், நேற்று முன்தினம் அங்கு சென்று அந்த சிறுவனையும், சிறுவனுடன் தங்கியிருந்த அந்த இளம் பெண்ணையும் பத்திரமாக மீட் வந்தனர். 

இதையடுத்து, அவர்கள் இருவரும் தேனிக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, மீட்கப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், தேனியில் வசித்து வரும் அந்த இளம் பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

அப்போது, அந்த கடைக்கு சென்ற சிறுவனுடன், அந்த இளம் பெண் காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துப் பழகி வந்து உள்ளனர். 

அதன் பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளம் பெண்ணின் வீட்டில் திருமணம் பற்றி பேச்சு அடிப்பட்டதைத் தெரிந்த கொண்ட அந்த இளம் பெண்,  வீட்டிற்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அதன் படியே திட்டமிட்டே காதல் ஜோடிகள் இருவரும், பெங்களூருவிற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு உள்ளனர். 

அதே நேரத்தில், தற்போத மீட்கப்பட்டு உள்ள இந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, 17 வயது சிறுவனுடன் 21 வயது இளம் பெண் மாயமான சம்பவத்தில், இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.