கல்லூரிக்குள் நுழைந்து மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் கல்லூரிக்குள் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் - திருச்சி சாலையில் அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

அப்போது, அந்த கல்லூரியில் படிக்கும் தனது காதலியான மாணவியைத் தேடி, கல்லூரிக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன், கையில் தாலியுடன் தனது காதலியைத் தேடி உள்ளான்.

அப்போது, அவரது காதலியும் அந்த இளைஞனின் கண்ணில் பட்டு உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாணவியிடம் ஏதோ பேசுவது போல் சிறிது நேரம் பேசியிருக்கிறான். இதனையடுத்து, அந்த பெண்ணை இறுக்கிப் பிடித்த படி, மற்றொரு கையில் இருந்த தாலியை, அந்த மாணவியின் கழுத்தில் கட்ட முயன்று உள்ளார்.

ஆனால், அதில் துளியும் விருப்பம் இல்லாத அந்த மாணவி, சத்தம் போட்டபடியே, அந்த இளைஞனின் பிடியில் இருந்து மீள போராடி உள்ளார். ஆனாலும், அந்த இளைஞன் எப்படியும் அந்த மாணவியின் கழுத்தில் தாலி கட்டிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக நடந்துகொண்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில், மாணவியின் கழுத்தில் தனது இரு கையால் தாலி கட்ட முயன்ற போது, அந்த ஒரு நொடியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட, அந்த மாணவி அந்த இளைஞனின் பிடியில் இருந்து தப்பி, அந்த கல்லூரிக்குள் ஓட்டம் பிடித்து உள்ளார்.

ஆனாலும், அந்த இளைஞன் அந்த மாணவியைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதற்குள், அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

போலீசார், உடனடியாக குறிப்பிட்ட அந்த கல்லூரிக்குள் வந்து உள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து போலீசர் விசாரித்து உள்ளனர்.

இளைஞரிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், அவர் தொட்டியத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பது தெரிய வந்தது.

மேலும், இந்த பலசுப்பிரமணியத்திற்கும், சம்மந்தப்பட்ட இந்த மாணவிக்கும் திருமணம் நிச்சயம் ஆனதும் தெரிய வந்தது.

ஆனாலும், அவர் ஏன் திருமணம் வரை காத்திருக்காமல், தற்போது அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து மாணவியின் கழுத்தில் பலவந்தமாகத் தாலி கட்ட முயன்றார் என்பது மட்டும் காவல்துறைக்குக் குழப்பமாக இருந்தது.

இதனையடுத்து, அந்த இளைஞனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கல்லூரிக்குள் நுழைந்து மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற காதலனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.