சூரரைப் போற்று திரைப்படத்தின் சிறப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | July 11, 2020 21:04 PM IST
திரையுலகின் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் சூர்யா. இவரது பிறந்தநாள் வர இன்னும் சில நாட்களே உள்ளதால், Common DP வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், சூர்யா பிறந்தநாளில் ஸ்பெஷல் அப்டேட்டுடன் சூரரைப் போற்று படக்குழுவினர் வரவுள்ளதாக பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் ரசிகர்கள்.
2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது.
பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து கூறியிருந்தார். அதில் இளைஞர்கள் விரும்பும் வகையில் இருப்பதாகவும், மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும் என்ற ருசிகர செய்தியை தெரிவித்தார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் திரையரங்க உரிமம் குறித்த வதந்திகள் இணையத்தில் பரவியது. அச்செய்தி தவறு என்று கலாட்டா வாயிலாக முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.
சூரரைப் போற்று அப்டேட்டுகள் ஒருபுறமிருக்க, பல்வேறு நலத்திட்டங்கள் செய்து அசத்தி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். கொரோனா நேரத்தில் தனது ரசிகர்கள் செய்த உதவிகள் குறித்து சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். நிறைய தம்பிகள் இப்படி உதவி செய்து வருகிறார்கள். தொடர்ந்து இப்படி செய்வது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் என்று ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் போன்ற படங்களின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Something special from team #SooraraiPottru is on the way for Suriya sirs bday .... details in the coming days ... #update
— G.V.Prakash Kumar (@gvprakash) July 11, 2020
SHOCKING: Suchi threatenend to be arrested by CBI | Sathankulam Incident
11/07/2020 06:30 PM
A Suitable Boy: Tabu's New Series - Official Trailer | Ishaan Khatter
11/07/2020 05:33 PM
Latest: Vijay Sethupathi opts out of this mega biggie due to date issues!
11/07/2020 04:32 PM
Dil Bechara Surprise! Have you seen this new video of Sushant Singh Rajput yet?!
11/07/2020 03:24 PM